Tuesday, 8 September 2015

பித்ரு தோஷம்-நிவர்த்தி பூஜை-தோஷம் நீங்க பரிகாரங்கள்!

  பித்ரு தோஷம் எதனால் வருகிறது?பித்ரு தோஷம் எதனால் வருகிறது?
பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.
பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.


 பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை
இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன

ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.

பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
1. பிதா - தகப்பனார்
2. பிதாமஹர் - பாட்டனார்
3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4. மாதா - தாயார்
5. பிதாமஹி - பாட்டி
6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.


பித்ரு தோஷம் வர காரணங்கள் என்ன?
கருச் சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந் தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்ய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்கா விட்டால் வரும். துர்மாணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப் பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யா விடில் பித்ருதோஷம் வரும்.


பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்!
ராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.

 பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும்

பித்ரு தோஷம் வருவதற்கான கரணங்கள்:
கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.  இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது

 பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.

 பித்ரு சாபம் போக்குவோம்!
நமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.

 ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..?
இந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும்  கோயில- ராமேஸ்வரம் கோவில்

யாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். பித்ரு தோசத்திற்காக இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமே! குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால்  அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.

பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்

காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்

இராமேஸ்வரம்-பார்க்க வேண்டிய இடங்கள்

பார்க்க வேண்டிய இடங்கள் ( local site seens )

1.ராமர் பாதம்
2.சாக்சி ஹனுமன்
3.ராமர் தீர்த்தம்
4.லக்ஷ்மன் தீர்த்தம்
5.சீதா தீர்த்தம்
6.ஐந்துமுக ஆஞ்சநேயர்
7.கொதண்டராமர் கோவில்
8.தனுஸ்கோடி .
9.வில்லுன்டி தீர்த்தம்
10.விவேகாநந்தர் பாறை
11. பாம்பன் பாலம் .
12.அபே ஆஞ்சநேயர் 


இராமநாதபுரம் மாவட்டத்தில்  இராமேஸ்வரம் என்ற நகரம் இருக்கிறது. இது  பாம்பன் தீவிலிருந்து  சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை மன்னார் தீவு, உள்ளது..,இந்திராகாந்தி பாலம்  (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு  சென்னை மதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்   இரயில் போக்குவரத்து இருக்கிறது . இராமேஸ்வரம்  இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் ஏ .பி .ஜே .அப்துல்கலாம் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது.  ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

 காமெரா கொண்டு செல்வது பாதுகாப்பு இல்லை மற்றும் போட்டோ எடுப்பது சற்று சிரமம் என்பதால், அங்கு சுற்றி திரியும் போட்டோகிராபர் ஒருவரிடம் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். (விலை ருபாய் ஐம்பது). கடலின் ஆரம்பம் சற்றே அழுக்கை இருப்பது போல் தோன்றினாலும் தைரியமாய் உள்ளே இறங்கி குளிக்கலாம் ஜாக்கிரதையாக. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.ராமன் ஒரு சத்ரியன், ராவணன் ஒரு பிராமணன். பிராமணனைக் கொன்ற பிரம்ம்ஹத்தி தோஷம் நீங்க சிவனை ராமன் வழிபட்டதால் ராம ஈஸ்வரம். ராமன் வழிபட்ட சிவனை, இருபத்தி இரண்டு தேவதைகள் தங்களுக்கென தனித் தனி தீர்த்தங்கள் அமைத்து அவற்றில் இருந்து நீர் எடுத்து வழிபட்டு வருவதாக நம்பிக்கை. அந்த  தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். சந்-தோசம் பெருகும். 

தீர்த்தங்களின் பெயர்கள் 

  1. மகாலட்சுமி தீர்த்தம் 
  2. சாவித்திரி தீர்த்தம் 
  3. காயத்ரி தீர்த்தம் 
  4. சரஸ்வதி தீர்த்தம் 
  5. சங்கு தீர்த்தம் 
  6. சக்கர தீர்த்தம் 
  7. சேதுமாதவ தீர்த்தம் 
  8. நள தீர்த்தம் 
  9. நீல தீர்த்தம் 
  10. கவய தீர்த்தம் 
  11. கவாச்ச தீர்த்தம் 
  12. கந்தமாதன தீர்த்தம் 
  13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் 
  14. சர்வ தீர்த்தம் 
  15. சிவா தீர்த்தம் 
  16. சத்யமிர்த்த தீர்த்தம் 
  17. சந்திர தீர்த்தம் 
  18. சூரிய தீர்த்தம் 
  19. கங்கா தீர்த்தம் 
  20. யமுனா தீர்த்தம் 
  21. கயா தீர்த்தம் 
தனுஷ்கோடி.........
 
 இங்கே வங்கக்குடாக் கடலும் வங்க விரிகுடாக்கடலும் ஒருங் கிணைந்து சங்கமம் ஆவதால் இது ஒரு புனித தீர்த்தக் கட்ட மாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தக்கடற்ரையில் காலை நேரத்தில் சூரிய உதயத்தையும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். ஆடி, தை, அமாவாசை நாள்களில் இங்கு உள்ள கடலில் நீராடி எழுவது பிதிர்களுக்கு ஏற்ற புண்ணியமாகக் கருதப்படுகிறது. தனுஷ்கோடி ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய இடம். அவ்வளவு அழகு அவ்வளவு அருமை.தனுஷ்கோடி செல்லும் பாதையில் நம் இரு பக்கமும் கடல் விரிகிறது. ஒரு பக்கம் வங்காள விரிகுடா இன்னொரு பக்கம் இந்தியப் பெருங்கடல். இங்கே இன்னும் ஒரு ஆச்சரியம் நிறைந்த இறைவனின் படைப்பை எண்ணி வியக்கலாம். அதனை இன்னும் ஒரு சில வரிகளில் சொல்கிறேன்.
கடல் நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. சென்னை திருச்செந்தூர் கன்னியாகுமரி என்று எங்குமே இல்லாத கடலை இங்கு பார்க்கலாம். கடலின் அழகும், பரந்து விரியும் கடற்கரையும் கவிதை பேசுகிறது. காமிராக் கண்களுக்கு ஏற்ற விருந்து. தனுஷ்கோடியின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் ஒரே இடத்தில சங்கமிகின்றன. வங்காள விரிகுடா பெண்கடல். இந்தியப் பெருங்கடல் ஆண் கடல். சாதுவான பெண் கடல் அலைகள் ஏதுமின்றி அமைதியாய் ஒருபக்கமும். ஆற்பரிக்கும் ஆண்கடல் மிரட்சியாய் அதன் அருகிலும் காட்சியளிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஏகாந்த ராமர் கோயில்.........
கருவறையில் அமைந்துள்ள ராமர், லட்சுமணர், சீதாபிராட்டி, அனுமர் ஆகியோர்களது திருமேனிகள் கல்லில் சிறப்பாக வடிக்கப்பட்டு நாள் தோறும் பூஜை செய்யப்படுகின்றன. ராமரது அருகில் நிற்கும் அனுமன் மிகவும் பணிவுடன் ராமனது வார்த்தைகளைக் கைகட்டி வாய் புதைத்துக்கேட்பது போன்ற அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

கோதண்டராமர் கோவில்......
 தனுஷ்கோடியில் இருந்து வரும் வழியில் இருக்கிறது கோதண்டராமர் கோவில். ராமன் விபீஷணனுக்கு இங்கு தான் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாக கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்தக் கோவிலை கடல் சூழ்ந்து இருந்ததாகவும், இப்போது பல மீட்டர்கள் பின் சென்று விட்டதாகவும்

ராமர் பாதம். ராமர் இங்கு இருந்து தான் இலங்கையை முதன் முறையாகப் பார்தரம். அது ஒரு சிறிய குன்று. ராமேஸ்வரத்தின் மொத்த காட்சியையும் இங்கிருந்து காணலாம்.  

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயருக்காக முப்பது வருடங்களுக்கும் மேல் எரியும் அணையா விளக்கு ஒன்று உள்ளது.

ராமநாதசுவாமி கோவில். சீதை செய்த மணலால் செய்த லிங்கம். ராமனால் வழிபடப்பட்ட லிங்கம், அனுமன் வாலை அறுத்த லிங்கம் அகஸ்தியரால் போற்றப்பட்ட லிங்கம் என்று இந்த லிங்கத்திற்கு பல சிறப்புக்கள் உள்ளன.  

மேலம் இது போன்ற பல பதிவுகளைக் காண இங்கு கிளிக் செய்க

9 comments:

  1. நன்றி தெளிவான தகவலுக்கு

    ReplyDelete
  2. இந்த மாதத்தில் பித்ரு பூஜை செய்ய சிறந்த நாள்!! அல்லது... செய்ய வேண்டிய கிழமை எது?? விளக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இநத மாதத்தில் பித்ரு பூஜைசெய்ய சிறந்த் நாள் எது

      Delete
  3. இராமேஸ்வரத்தை சுற்றி உள்ள தீர்த்தங்கள் பற்றி தகவல்கள் அளிக்க முடியுமா ?

    ReplyDelete
  4. பல கோடி நன்றிகள்

    ReplyDelete
  5. பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் இம் மாதம் எந்த தேதி இல் செய்ய வேண்டும்

    ReplyDelete
  6. எங்கள் குடும்பத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டும். எப்படி யாரை அணுகுவது

    ReplyDelete
  7. 4ஆம் தேதி பரிகாரம் செய்ய போன் நம்பர் தரவும்

    ReplyDelete